பிரித்தானியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து திடீரென 700 பேர் வெளியேற்றம்! அவசர நிலை பிரகடனம்: என்ன நடந்தது?

by Web Team
0 comment

பிரித்தானியாவில் அடுக்குமாடி குடியிப்பில் இருந்து 700 பேர் வெளியேற்றப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Crawley பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தே நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஜனவரி 6, புதன்கிழமை அதிகாலை 12.21 மணியளவில் ஒரு குறிப்பிடத்தக்க எரிவாயு கசிவு ஏற்பட்டது என Sussex பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Crawley-ல் உள்ள ஒரு குடியிருப்பில் எரிவாயு கசிந்த பின்னர் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

West Sussex தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை, தென்கிழக்கு கடற்கரை ஆம்புலன்ஸ் சேவை ஆகியவை சம்பவியடத்திற்கு விரைந்துள்ளன.

West Sussex கவுண்டி கவுன்சில், Crawley பகுதி கவுன்சில் மற்றும் Southern Gas ஆகியவையும் பிரச்சினையை விரைவாகவும் பாதுகாப்பாகவும் தீர்க்க சம்பவயிடத்திற்கு வந்துள்ளன.

அப்பகுதி பாதுகாப்பானது என உறுதி செய்யப்படும் வரை இருக்கும் வரை சுமார் 700 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டு தற்காலிக தங்குமிடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எரிவாயு கசிவில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதையும் பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Related Posts

Leave a Comment