ஜேர்மனியில் பொது முடக்கம் ஜனவரி 31ஆம் திகதி வரை நீடிப்பு

by Lankan Editor
0 comment

ஜேர்மனியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் ஜனவரி 31ஆம் திகதி வரை நீடிக்கப்படுகிறது என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜேர்மனியும் ஒன்று. அங்கு கொரோனா வைரசின் 2ஆவது அலை வேகமாக பரவி வருகிறது.

இதனிடையே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக்குவது குறித்து அரசாங்கம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது.

இதனையடுத்து ஜனவரி 10ஆம் திகதி வரை அமுலில் உள்ள நாடளாவிய முடக்கத்தை, ஜனவரி 31ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முடக்கத்தை மிகவும் கடுமையாக கடைப்பிடிக்க அரசு முடிவு செய்துள்ளது என ஜேர்மன் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment