அஜித் படத்தில் ‘குக் வித் கோமாளி’ பிரபலம்.வேகமெடுக்கும்‘வலிமை’

by Web Team
0 comment

கொரானா காரணமாக தடைப்பட்டிருந்த நடிகர் அஜித்தின் 60-வது படமான வலிமையின் படபிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. எச்.வினோத் இயக்கும் இப்படத்தை, போனி கபூர் தயாரிக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நடிகர் அஜித் நடிக்கும் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது. ஓராண்டுக்கும் மேலாக ‘வலிமை’ திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருவதால் படம் குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு அஜித் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து படக்குழு சில தகவல்களை வெளியிட்டது. அதில், படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களை கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கிறார் அஜித். அஜித் பைக் வீலிங் செய்யும் புகைப்படம், குடும்பத்தினருடன் நிற்கும் போட்டோ உள்ளிட்ட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் கசிந்தன.

இந்நிலையில் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் அசத்தி வரும் புகழ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாகவும், அவர் கேரக்டருக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment