மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் ரீ எண்ட்ரி கொடுக்கும் போட்டியாளர்கள்.. ஆனால் இவர் மட்டும் வரமாட்டாரா?

by Web Team
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 93 நாட்களை கடந்த நிலையில், இறுதியில் இன்னும் 7 போட்டியாளர்களே எஞ்சியுள்ளனர்.

இதனையடுத்து, யார் யார் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற போகிறார்கள் என ரசிகர்கள் மட்டுமின்றி போட்டியாளர்களும் ஒரு வித அச்சத்திலேயே உள்ளார்கள்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் இதுவரை எலிமினேட் செய்ய பட்டு வெளியே சென்ற போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வரும் அந்த போட்டியாளர்கள் அனைவரும் ஒரு வாரம் பிக்பாஸ் வீட்டில் தங்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், மீண்டும் வரும் போட்டியாளர்களில் அனிதா சம்பத் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல மாட்டார் என தெரிகிறது.

இதற்கு அனிதா சம்பத் தந்தையின் மரணம் கூட காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இதனால் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கவிருக்கும் சுவாரஸ்யத்தை காண்பதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Related Posts

Leave a Comment