கொஞ்சம் கூட இடைவெளி இல்லாமல் கொட்டிதீற்கும் கனமழை.! வீட்டிற்குள் முடங்கிய சென்னை மக்கள்.!

by Lifestyle Editor
0 comment

சென்னையில் தொடர்ந்து 8 மணி நேரத்திற்கு கனமழை பெய்துவருவதால் பல இடங்களில் சாலைகளில் நீர் நிரம்பி ஓடுகிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலையில் இருந்து சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில், இன்று அதிகாலை 6 மணிக்கு ஆரம்பித்த கனமழை மதியம் 2 மணி வரையிலும் விடாமல் பெய்து வருகிறது. சென்னையில் கோயம்பேடு, எழும்பூர், கோடம்பாக்கம், தி.நகர். சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, கிண்டி, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் தொடர்ந்து 8 மணி நேரத்திற்கு கனமழை பெய்துவருவதால் பல இடங்களில் சாலைகளில் நீர் நிரம்பி ஓடுகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாலையில் இருந்து சென்னை மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

Related Posts

Leave a Comment