ஜல்லிக்கட்டில் எறுமை மாடு… மதுரை கலெக்டருக்கு எதிராக சர்ச்சை போஸ்டர்

by Web Team
0 comment

தமிழ்நாடு பாரம்பரிய ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த மாணவர்களை அவமானப்படுத்தும் வகையில் கலப்பின மாடுகளையும், எறுமை மாடுகளையும் ஜல்லிக்கட்டில் அவிழ்க்க கூறிய மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களூக்கு நன்றி என்று மதுரை எங்கிலும் சர்ச்சை போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்பத்தி இருக்கிறது.

மதுரை ஆண்டவா ராஜ் பெயரில் அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டு போட்டு நடத்துவது தொடர்பாக மதுரையில் நேற்று ஆட்சியருடன் மாடு வளர்ப்போர், ஜல்லிக்கட்டு வீரர்கள் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, ஜல்லிக்கட்டில் கலப்பின மாடுகளை பங்கேற்க அனுமதிக்க கூடாது என்று கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் ஆட்சியரோ எந்த மாடாக இருந்தாலும் அவிழ்க்கலாம் என்று தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதன் காரணமாகவே ஆண்டவர் ராஜ் என்பவர் அந்த சர்ச்சை போஸ்டர்களை மதுரைஎங்கிலும் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

Related Posts

Leave a Comment