“ஆம்பள பையன் தானே ஓடிவந்து என்னை தொடு” மீண்டும் பாலா – ஆரி இடையே மோதல்!

by Web Team
0 comment

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பினாலே ஆரம்பித்துள்ளது. இறுதி போட்டியில் ரியோ, பாலா, ஆரி, சோம், கேபி, ரம்யா, ஷிவானி ஆகியோர் உள்ளனர். நேற்று கொடுத்த 2 டாஸ்க்குகளில் ஒன்று தண்ணீர் நிரம்பிய பலூனை ஒரு கையில் பிடித்துக்கொண்டு நிற்க வேண்டும். இந்த டாஸ்கில் வெற்றி பெற்றவர் பாலா, 2 ஆம் இடம் ரியோவுக்கு கிடைத்தது. இரண்டாவது டாஸ்க் தலையில் ஒரு கட்டையை வைத்து அதை கொடுக்கப்பட்ட ஃப்ரேமில் முட்டி நிற்க வேண்டும் என்பது தான். இதில் வென்றவர் ரம்யா. இந்த டாஸ்க்கிலும் ரியோ வுக்கு இரண்டாம் இடமே கிடைத்தது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், வழக்கம் போல டாஸ்க்கில் ஆரி – பாலா இடையே மோதல் ஏற்படுகிறது. இதில் ஆரி இப்படி விளையாட விளையாடாமலே இருக்கலாம்.

ஆம்பள பையன் தானே ஓடிவந்து என்னை தொடு என்று சொல்ல, பாலா முறைப்பது போல ப்ரோமோ வீடியோ முடிகிறது. சூரனை பற்றி சொல்லாமல் கந்த புராணத்தை எந்த கவிஞனாலும் சொல்ல முடியாது என்பது போல பாலா – ஆரி சண்டை இல்லாமல் பிக் பாஸ் சீசன் 4 இல்லை என்பதே மோசமான உண்மை.

Related Posts

Leave a Comment