விமான நிலையங்களை ஜனவரி 23 ஆம் திகதி முதல் திறக்க நடவடிக்கை

by Lankan Editor
0 comment

ஜனவரி 23 ஆம் திகதி தொடக்கம் விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைத்து வணிக விமானங்களுக்காக விமான நிலையங்கள் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

சுற்றுலாத்துறை இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சுகாதார அதிகாரிகள்நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Posts

Leave a Comment