நயன்தாராவுக்கு திருமணமா?

by Web Team
0 comment

நயன்தாரா கேரளாவில் இருந்து சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு பட உலகில் நம்பர்-1 கதாநாயகியாக இருந்து வருகிறார். 10 வருடங்களாக அவரது மார்க்கெட்டை சக நடிகைகளால் சரிக்க முடியவில்லை. அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நயன்தாரா, ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம்,விஷால், தனுஷ், சிம்பு உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. கைவசம் அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. மலையாளத்திலும் 2 படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர படத்தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஏற்கனவே 2 முறை காதல் முறிவை சந்தித்துள்ளார் நயன்தாரா. கடந்த 2015-ம் ஆண்டு வெளியான நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது.

இந்நிலையில், நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற உள்ளதாகவும் இதற்கான ஏற்பாடுகளில் இரு குடும்பத்தினரும் ஈடுபட்டு உள்ளனர் என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த தகவலின் உண்மைத் தன்மை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த செய்தி எப்போதும்போல் வதந்தியா என பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Related Posts

Leave a Comment