வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் ஓட்டு போடலாம்!

by Web Team
0 comment

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்க நடவடிக்கைகளை எடுக்கலாம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த நவ. மாதம் தலைமை தேர்தல் ஆணையம் மத்திய சட்டத்துறையிடம், வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைன் மூலம் தேர்தலில் வாக்களிக்கும் விதமாக தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள அனுமதி கேட்டிருந்தது. வெளியுறவுத்துறையிடமும் ஒப்புதல் கோரப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆன்லைனில் வாக்களிக்கும் நடைமுறையை மேற்கொள்ளலாம் என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. தேர்தல் தொடர்பான பிற அமைப்புகளுடன் தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தை இறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஒரு லட்சத்து 17 ஆயிரம் வாக்காளர்களாக இருக்கின்றனர். அவர்கள் இனி வரும் தேர்தல்களில் வாக்களிக்க தேர்தல் விதிமுறைகளில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையம் கோரியிருந்தது. இதற்கு தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதால், வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்புகள், பின்னர் வெளியாகும் என்று வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts

Leave a Comment