கல்லூரி மாணவரை தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்…

by Web Team
0 comment

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் தனியார் கல்லூரி பெண் பேராசிரியருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்த பி.எட் மாணவரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்பபடைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் அவ்வை நகரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட் பட்டப்படிப்பு படித்து வருகிறார். கல்லூரியில் பணிபுரியும் 29 வயது பெண் பேராசிரியர் ஒருவருடன், ராஜேஷ் நட்புரீதியாக பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில், அந்த பேராசிரியருக்கு ஆபாச வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக கூறப்படுகிறது. இதை அவர் பெரிதுபடுத்த வேண்டாம் என்று அமைதியாக இருந்த நிலையில், திடீரென ராஜேஷ் போன் மூலம் அந்த பேராசிரியை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பேராசிரியை ராஜேஷ் உடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று கல்லூரி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்ற பேராசிரியரை பின்தொடர்ந்து சென்ற ராஜேஷ், குனிச்சி என்ற இடத்தின் அருகே அவரை வழிமறித்து உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ராஜேஷ், அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததுடன், அவரை நகர விடமால் அங்கேயே தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பேராசிரியை கத்தி கூச்சலிட்டார். இதனை கண்ட அருகாமையில் இருந்த பொதுமக்கள் ராஜேஷை பிடித்து தர்மஅடி கொடுத்து கந்திலி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு பேராசிரியை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜேஷை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment