உயிர் உறையும் குளிர்… 5,000 மைல்கள்: விமான சக்கரத்தில் தொங்கி லண்டன் வந்து சேர்ந்த நபர்

by Lifestyle Editor
0 comment

தென்னாப்பிரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக விமான சக்கரத்தில் தொங்கியபடி லண்டன் வந்து சேர்ந்த நபரின் இன்றைய நிலை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2015-ல் நடந்த இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 30 வயது Themba Cabeka தற்போது பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளார்.

தனது நெருங்கிய நண்பரான Carlito Vale உடன் ஜூன் 18, 2015-ல் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்றில் தெம்பா கபேகா திருட்டுப்பயணம் மேற்கொண்டார்.

விமானத்தின் சக்கரத்தில் தொங்கியபடி உறையவைக்கும் -60C குளிரில் சுமார் 11 மணி நேரம் இருவரும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் பட்டினிச் சாவில் இருந்து தப்பவே நண்பர்கள் இருவரும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத இந்த ஆபத்தான பயணம் மேற்கொள்ள முடிவுக்கு வந்துள்ளனர்.

இருவருக்கும் இதுவே முதல் விமான பயணம். விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தெம்பாவும் அவரது நண்பரும் மயக்கமுற்றுள்ளனர்.

ஆனால் விமான சக்கரத்துடன் மின்சார கேபிள் மூலம் தம்மை பிணைத்துக் கொண்டு தப்பியுள்ளனர் இருவரும்.

இதனிடையே விமானம் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கும் முன்னர் ஏற்கனவே பரிதாப நிலையில் இருந்த Carlito சுமார் 5,000 அடி உயரத்தில் இருந்து விழுந்து மரணமடைந்துள்ளார்.

Richmond பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீதிருந்து, அவரது சடலம் மீட்கப்பட்டது. தெம்பா லண்டன் விமான நிலையத்தின் ஓடுதளத்தில் மயக்கமுற்ற நிலையில் மீட்கப்பட்டார்.

ஆனால் அதன் பின்னர் சுமார் 6 மாத காலம் கோமா நிலையில் தெம்பா சிகிச்சையில் இருந்துள்ளார்.

கோமாவில் இருந்து கண் விழித்த அன்று பொலிசார் முன்னெடுத்த விசாரணையிலேயே தெம்பாவுக்கு தமது நண்பர் Carlito தவறி விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் தெரிய வந்துள்ளது.

நீண்ட ஐந்தரை ஆண்டுகளுக்கு பின்னர் தெம்பா தற்போது தமது பெயரை மாற்றிக் கொண்டு, பிரித்தானிய குடியுரிமையும் பெற்று லிவர்பூல் பகுதியில் வசித்து வருகிறார்.

Related Posts

Leave a Comment