முதல்வரை ஃபாலோ செய்த கார் திடீர் விபத்து

by Lifestyle Editor
0 comment

தூத்துக்குடியில் இருந்து சேரன்மகாதேவிக்கு முதல்வர் பழனிசாமி வாகனத்தை தொடர்ந்து சென்ற கார்கள் இரண்டு ஒன்றன் மீது ஒன்று மோதின.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அருகேயுள்ள கோவிந்தபேரியில் மறைந்த சட்டமன்ற முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியனுக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் பங்கேற்க முதல்வரும் , துணை முதல்வரும் ஒரே காரில் ஒன்றாகி பயணித்தனர். இந்த விழாவில் கலந்துகொள்ள அமைச்சர்கள் கடம்பூர் செ.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் சென்றனர். அப்போது வல்லநாடு அருகே முதல்வரின் காரை பின்தொடர்ந்த படி நிர்வாகிகள் பலர் சென்றனர்.

அப்போது அதிமுக நிர்வாகியின் கார் ஒன்று வேகமாக வந்து சாலையின் நடுவே இருக்கும் தடுப்பில் மோதியது. விபத்துக்குள்ளான கார் மீது மற்றொரு கார் வந்து மோதியது. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் சாலையின் நடுவே மாடு ஒன்று வந்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது விபத்து வீடியோ வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Related Posts

Leave a Comment