கர்ப்பம் தங்கவே மாட்டேங்குதா?…

by Lifestyle Editor
0 comment

மாதவிடாய் நாட்களின் ஒழுங்கின்மை தவிர, வேறு பிரச்னைகள் சினைப்பை நீர்க்கட்டிகளால் கிடையாது. கருமுட்டையானது கர்ப்பப்பையை அடைய தாமதமாவது தான் ஒழுங்கற்ற மாதவிடாய்க்குக் காரணம். உணவில் நேரடி இனிப்புப் பண்டங்களைத் தவிர்ப்பதும், நார்ச்சத்து நிறைய உள்ள கீரைகள், லோ கிளைசிமிக் (Low Glycemic Foods) உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதும் நல்ல தீர்வைக் கொடுக்கும். இன்னும் என்னென்ன மாதிரியான உணவு முறைகளைப் பின்பற்றினால் கருத்தரிப்பு வேகமாக நிகழும் என்று இங்கே பார்க்கலாம்.

​நீர்க்கட்டிகள் கரைய

இன்றைய காலகட்டத்தில் நிறைய பெண்களுக்குக் கருத்தரிப்பது தாமதமாவதற்கு மிக முக்கியமான காரணமே கருப்பை நீர்க்கட்டிகள் தான். இவற்றிற்கு என்னதான் சிகிச்சை மேற்கொண்டாலும் உணவின்மூலம் சரிசெய்வது தான் பக்க விளைவுகளற்ற நிரந்தரமான பலன்களைத் தரும். அப்படி நீர்க்கட்டி பிரச்சினை உள்ளவர்கள் பூண்டு, எள், கறுப்புத்தோல் உளுந்து, வெந்தயப் பொடி ஆகியவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்தும்.

​தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள்

நிறைய பெண்களுக்குக் கருத்தரித்தல் தாமதமாவதற்கு தைராய்டும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. தைராய்டு சுரப்பு சரியாக இல்லையென்றாலும், கருத்தரிப்பு தாமதமாகும். உணவில் மீன்கள் மற்றும் கடல் உணவுகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். சாதாரண உப்புக்கு பதிலாக கல் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இவை தைராய்டு பிரச்னையைச் சீராக்க உதவும்.

​ஆண்கள் சாப்பிட வேண்டியவை

ஆண்களுக்கு விந்து அணுக்கள் குறைவு, உயிரணுக்களின் இயக்கமும் ஆற்றலும் குறைவாக இருப்பது போன்ற காரணங்களால் கூட கருத்தரிப்பது தாமதமாகும். வெளியில் சொல்லக் கூச்சப்பட்டுக் கொண்டு சொல்லாமல் இருக்கலாம். அப்படி இருப்பதால் எந்த பயனும் கிடைக்காது. வீரியம்மிக்க விந்தணுக்களைப் பெற வேண்டுமென்றால் உணவில் அதிகமாக முளை கட்டிய பயறுகளையும், இலவங்கப்பட்டை, ஜாதிக்காய் போன்ற நறுமணப் பொருட்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் முருங்கைக்கீரை, முருங்கை விதை, முருங்கைப்பிசின், சாரைப் பருப்பு ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் தூதுவளை, பசலை, சிறுகீரை ஆகிய கீரைகளில் ஏதாவது ஒன்றை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

​சைவ உணவுகள்

மாமிச உணவைவிட அதிகமாக சைவ உணவுகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கீரை, காய்கறிகளுக்கும், பழ வகைகளுக்கும் உணவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஹோட்டல் உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

​கொத்தமல்லி

குழந்தைக்கு ரொம்ப நாளா ட்ரை பண்ணியும் தள்ளிப் போய்க் கொண்டே இருப்பவர்களுக்கு கொத்தமல்லியின் அருமை பெரிதாகத் தெரிவதில்லை. கொத்தமல்லி இலையை ஒரு கைப்பிடியளவு எடுத்துக் கொண்டு அதனுடன் அரை டீஸ்பூன் வெந்தயத்தைச் சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும்.

Related Posts

Leave a Comment