ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை 10 ரன்னில் வீழ்த்தியது மெல்போர்ன் ஸ்டார்ஸ்

by Lifestyle Editor
0 comment

ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ்- மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின.

ஹோபர்ட் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆட்டமிழக்காமல் 55 பந்தில் தலா 7 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 97 ரன்கள் விளாச மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.

பின்னர் 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் பென் மெக்டெர்போட் அபாரமாக விளையாடினார். அவர் 58 பந்தில் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களே அடிக்க முடிந்தது.

இதனால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Posts

Leave a Comment