ஜிமிக்கி கம்மல் பாடல் பிரபலம் மரணம்!

by Lifestyle Editor
0 comment

சினிமா படங்களின் வெற்றிக்கு பாடல்கள் தான் பக்கத்துணை எனலாம். படம் தியேட்டருக்கு வருமுன் பாடல்கள் தான் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுகிறது. இதன் பின்னணியில் பாடலாசிரியர்களும் இருக்கிறார்கள்.

அவர்களின் கை வண்ணத்தில் வந்த வரிகள் தான் நம்மை பாடல்களை அடிக்கடி முனுமுனுக்கவும், பாடவும் வைக்கின்றன. காலம் கடந்தும் அவை நம் மனதில் இருக்கின்றன.

தற்போது பிரபல பாடலாசிரியர் அனில் பனசூரான் திருவனந்தபுரத்தை மாரடைப்பால் காலமானாதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பல படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள அவருக்கு வயது 55. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு Mavelikkara, Karunagapally பகுதி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

2017 ல் இந்தியா முழுக்க பலரையும் கொண்டாட வைத்த ஜிமிக்கி கம்மல் பாடலை எழுதியதும் அவர் தான்.

இதனால் கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதற்கு இடையில் அவருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment