பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை காலப்பகுதியில் 75ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மையில் வெளியான உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி,மொத்தமாக வைரஸ் தொற்றினால், 75ஆயிரத்து 24பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 6ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக 26இலட்சத்து 54ஆயிரத்து 779பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 54ஆயிரத்து 990பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 454பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 847பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.