ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் கேட்டரிங் நிறுவனத்தின் ஊழியர்கள் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Lankan Editor
0 comment

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் கேட்டரிங் நிறுவனத்தின் ஊழியர்கள் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கம்பாஹா மாவட்ட சுகாதார சேவைகளின் பிராந்திய பணிப்பாளர் டாக்டர் மிகராபா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் கேட்டரிங் நிறுவனத்தில் நேற்றைய தினம் இரு புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை பற்றி அறிய நிறுவனம் தொடர்ந்து பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு நோயாளிகள் நேற்றைய தினம் சுகாதாரப் பிரிவின் கட்டுநாயக்க சீதுவ மருத்துவ அதிகாரியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரிவின் நிர்வாக பொது சுகாதார ஆய்வாளர் சுரேஷ் குமாரா தெரிவித்தார்.

அவர்களில் ஒருவர் சீதுவாவில் ஒரு கையுறை உற்பத்தி தொழிற்சாலையில் பணிபுரிபவர்இ மற்றையவர் கட்டுநாயக்க, ஹீனதியன பகுதியைச் சேர்ந்த 09 வயதுடைய குழந்தை ஆவார்.

மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக அவர்கள் வத்துபிடிவலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Related Posts

Leave a Comment