கொரோனா விதிமுறைகளை மீறிய இந்திய வீரர்கள் – எச்சரித்த ஆஸ்திரேலியா அரசு

by Web Team
0 comment

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி வெளியில் சுற்றியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

கரோனா பாதுகாப்பு வளைய விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும், இல்லையெனில் குயின்ஸ்லாந்துக்கு வர வேண்டாம் என இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்கு குயின்ஸ்லாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் ஆட்டம் குயின்ஸ்லாந்து தலைநகர் பிரிஸ்பேனில் நடைபெறுகிறது.

இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், ரிஷப் பந்த், நவ்தீப் சைனி உள்ளிட்டோர் பாதுகாப்பு வளையத்தை மீறியதாக எழுந்த புகாரையடுத்து, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதுகுறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளால் தேர்வு செய்யப்பட்ட குயின்ஸ்லாந்து சுகாதாரத் துறை அமைச்சர் ஹாஸ் பேட்ஸ் தெரிவிக்கையில், “இந்தியர்களால் விதிமுறைகளைப் பின்பற்ற முடியாவிட்டால் அவர்கள் வர வேண்டாம்” என்றார்.

இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தலை விரும்பவில்லை. அதனால் மைதானத்துக்கு செல்வதைத் தவிர்த்து மற்ற நேரங்களில் விடுதியிலேயே இருக்க வேண்டும் என்றால் நாங்கள் பிரிஸ்பேன் செல்ல விரும்பவில்லை. வேறு ஒரு நகரத்தில் இரண்டு டெஸ்ட் ஆட்டங்களையும் விளையாடி சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்புவதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இது சலசலப்பை உருவாக்கியுள்ளது.

இதனால், ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் ஆட்டம் பிரிஸ்பேனில் நடைபெறுவது கேள்விக்குள்ளாகியுள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் ஆஸ்திரேலிய அணி பிரிஸ்பேனிலே விளையாட விரும்புவதாக கேப்டன் மேத்யூ வேட் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment