அன்பான மனைவி மற்றும் அழகான பிள்ளைகள்! இன்று உயிரோடு இருப்பதே கடவுள் புண்ணியம்! பிரபல ஈழத்தமிழர் நடிகரின் வாழ்க்கை பாதை

by Web Team
0 comment

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் போண்டா மணி.

ஈழத்தமிழரான போண்டா மணி, நடிகர் வடிவேலுவுடன் சேர்ந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் அசத்தியுள்ளார்.

போண்டா மணிக்கு மாதவி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்

தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து போண்டா மணி ஒருமுறை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில், நான் இலங்கையைச் சேர்ந்தவன் என்பது கிட்டத்தட்ட சினிமா ஆள்கள் எல்லோருக்குமே தெரியும். என்னுடைய கதை பெரிய கதை. நான் இன்றைக்கு உயிரோடு இருக்கிறதே கடவுள் புண்ணியம் தான். காலில் அடிபட்டப்போவே இறந்திருக்க வேண்டியவன்.

இலங்கையில் மளிகைக் கடை நடத்தி வந்தார் என் அப்பா. எங்க குடும்பத்துல என்னையும் சேர்த்து மொத்தம் 16 பிள்ளைகள். அதில், ஒருத்தர் குண்டடி பட்டு இறந்துட்டார். 5 பேர் படகில் போகும்போது அலை இழுத்துக்கிட்டு கடல்ல கூட்டிக்கிட்டு போயிடுச்சு. ஒருசிலர் மட்டும்தான் மிஞ்சினோம்.

என்னை ஒருமுறை சுட்டதில் என் இடது காலில் குண்டு துளைத்தது. பிறகு, சிங்கப்பூர் போயிட்டேன், அங்கே ஒரு கடையில சேல்ஸ்மேனா வேலை பார்த்தேன். அங்கே ஷூட்டிங்க்காக வந்திருந்த பாக்யராஜ் சாரை சந்தித்தேன்.

பிறகு தமிழகம் வந்தேன். மீண்டும் பாக்யராஜை சந்தித்த பிறகு தான் எனக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தார்.

கலைஞர், ஜெயலலிதா என இரண்டு முதல்வர்களும் எனக்கு நல்லது பண்ணியிருக்கிறார்கள். கலைஞர் என்னை ஊக்கப்படுத்தினார்.

ஜெயலலிதா கட்சியின் உறுப்பினராக்கி, ஜெயா டி.வியில் நிகழ்ச்சி செய்யச் சொன்னார். ஆனால், இதுவரை எனக்கு எந்தவிதமான குடியிருப்புச் சான்றோ, வாக்காளர் அட்டையோ, வீடோ கிடைக்கவில்லை என கூறியிருந்தார்.

Related Posts

Leave a Comment