தந்தையின் இறப்பிற்கு பின்பு லொஸ்லியா பதிவிட்ட முதல் புகைப்படம் – ஆறுதல் கூறும் ரசிகர்கள்

by Web Team
0 comment

கடந்த ஆண்டு முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்துள்ள சம்பவம் லாஸ்லியா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் freeze டாஸ்க்கின் போது லாஸ்லியாவை சந்திக்க அவரது தந்தை பிக் பாஸ் வீட்டிற்குள்சென்று இருந்தார்.

10 வருடங்கள் கழித்து தனது தந்தையைக் கண்ட சந்தோசத்தில் லாஸ்லியா கண்ணீர் விட்டு அழுதார் லாஸ்லியா. இப்படி ஒரு நிலையில் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி இரவு கனடா நாட்டில் இவர் மாரடைப்பு காரணமாக இறந்து இருந்தார்.

இதனால் லாஸ்லியவிற்கு பலரும் ஆறுதல் கூறி வந்தனர். மேலும், லாஸ்லியா தந்தையின் மரணம் தற்கொலை என்று கூட வதந்திகள் பரவியது. ஆனால், அவர் இயற்கை மரணம் தான் அடைந்தார் என்று மருத்துவர்கள் அறிவித்து இருந்தர்கள்.

ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாகவும், லாஸ்லியாவின் தந்தை வெளிநாட்டில் இறந்த காரணத்தாலும் அவரது உடல் லாஸ்லியாவின் சொந்த நாடான இலங்கைக்கு கொண்டு வர தாமதமானது.

இப்படி இலங்கைக்கு நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து மரியாநேசனின் உடல் இலங்கைக்கு கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி கொண்டு வரப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தி இருந்தனர். தனது தந்தையின் இழப்பால் பெரும் சோகத்தில் இருந்து வந்தார் லாஸ்லியா.

இந்நிலையில் தனது தந்தையின் இறப்பிற்கு பின்னர் லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இறுதியாக லாஸ்லியா கடந்த தீபாவளி பண்டிகைக்கு இறுதியாக தெரிவித்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதன் பின்னர் தனது தந்தையின் இழப்பால் எந்த பதிவையும் போடாமல் இருந்த லாஸ்லியா தற்போது தந்தை இழந்த சோகத்தில் இருந்து மீண்டு பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் பலரும் லாஸ்லியாவிற்கு ஆறுதல் கூறியும் தைரியம் கூறியும் கமன்ட் செய்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment