நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் மரணம்

by Lankan Editor
0 comment

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இரு மரணங்கள் பதிவாகியுள்ளன என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் பதிவான கொவிட்- 19 மரணங்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்வடைந்துள்ளது.

அதன்படி வெலிபென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான பெண்ணொருவர், களுத்துறை பொது வைத்தியசாலையில் கொவிட்- 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

அவரது மரணத்திற்கான காரணம் கடுமையான மார்பு தொற்று மற்றும் கொவிட்-19 நிமோனியா நிலையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதான பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட் -19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

மரணத்திற்கான காரணம் கொவிட் -19 நிமோனியா, இதய நோய் நிலைமை மற்றும் வலிப்பு நோய் நிலை என அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment