முதலில் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

by Lifestyle Editor
0 comment

சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” முதலாவதாக முன்கள பணியாளர்களுக்கும் பின்னர் பொதுமக்களுக்கும் தடுப்பு செலுத்தப்படும். முதற்கட்டமாக 6 லட்சம் முன்களப் பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டு தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. கோவிஷீல்டு, கோவாக்சின் மருந்துகளுக்கு அனுமதி தந்தது மக்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது. தமிழகத்தில் முதல் கட்டமாக 2.5 கோடி மருந்துகளை சேமித்து வைப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கொரோனா இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

பாரத் பயோடெக் நிறுவனமும், சீரம் நிறுவனமும் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் மருந்துகளுக்கு டி.ஜி.சி.ஐ அனுமதி அளித்துள்ளது. அந்த மருந்துகள் பாதுகாப்பானது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தது. இதனை தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபடுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment