குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை

by Lifestyle Editor
0 comment

தேனி

கம்பம் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்த மளிகைக்கடை உரிமையாளரை போலீசார் கைதுசெய்தனர். தேனி மாவட்டம் கம்பம் பழைய பேருந்து நிலையம் அருகே கௌமாரியம்மன் கோயில் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபர் வேலவன்(35). இவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை, கடையில் பதுக்கிவைத்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உத்தம பாளையம் டி.எஸ்.பி. சின்னக்கண்ணுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கடையில் விற்பனை செய்வதற்காக சுமார் 6 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த குட்கா புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார், வேலவனை (35) கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment