ஒரு தலை காதலால் பெண்ணுக்கு நேர்ந்த நிலை..

by Lifestyle Editor
0 comment

தன்னுடைய பெண் தோழி தன்னோடு திடீரென பேசுவதை நிறுத்திக்கொண்டதால் கோபமுற்ற ஒரு வாலிபர் அந்த பெண்ணை வாள் கொண்டு தாக்கினார்.

மகாராஷ்டிராவின் பீட் நகரில் வசிக்கும் போபாட் போப்டே என்ற 17 டீனேஜ் வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணோடு நண்பராக பழகியுள்ளார் .அந்த பெண்ணும் அவரோடு நல்ல நண்பராக நினைத்துதான் பழகினார் .ஆனால் அந்த வாலிபர் அந்த பெண்ணை ஒரு தலையாக காதலிக்க ஆரம்பித்துள்ளார் .அதை தெரிந்து கொண்ட அந்த பெண் அவரிடமிருந்து விலகினார் .மேலும் அவரோடு பேசுவதை நிறுத்திக்கொண்டார் .அதனால் அந்த வாலிபர் போபாட் அந்த பெண்ணின் மீது கோபம் கொண்டார் .

அதனால் அவரிடம் பேசுவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தார் .அவரின் தோழிகள் மூலமாகவும் தூது விட்டார் .பலமுறை சமூக ஊடகத்தின் மூலமும் அந்த பெண்ணோடு தொடர்பு கொள்ள முயற்சித்தார் .ஆனால் அந்த பெண் அவரை ப்ளாக் செய்து விட்டார் .மேலும் அவரின் போன் நம்பரையும் ப்ளாக் செய்து விட்டார் .

அதனால் அந்த போப்ட்டேக்கு அந்த பெண்ணின் மீது கோபம் அதிகமானது .அதனால் கடந்த வாரம் புதன்கிழமை மாலை,அந்த பெண்ணின் பெற்றோர்கள் வெளியே சென்றிருந்த போது அந்த பெண்ணின் வீட்டிற்குள் ஒரு வாளோடு நுழைந்தார் .அப்போது அந்த வீட்டை பூட்டி விட்டு ,அந்த பெண்ணை அவர் கொண்டு வந்திருந்த வாள் கொண்டு தாக்கினார் .இதனால் அந்த பெண் கடுமையான காயமுற்று ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார் .அப்போது அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர்கள் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்கள் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது .அதன் பிறகு கொலை முயற்சி மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஐபிசி பிரிவுகளின் கீழ் போப்டே வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Related Posts

Leave a Comment