பூட்டுதல் விதிகளை மீறி திருமண நிகழ்ச்சியில் கும்மாளம்; ரோந்து பணியில் இருந்த பொலிஸிடம் உளறி மாட்டிக்கொண்ட கும்பல்

by Lifestyle Editor
0 comment

விதிகளை மீறி திருமண நிகழ்ச்சி நடத்தியவர்கள் மீது பொலிஸார் 10,000 பவுண்ட் அபராதம் விதித்துள்ளது.

பிரித்தானியாவில் சர்ரே கவுன்டியில் ரோந்து பணியில் இருந்த பொலிஸார், கிங்ஸ்வுட் பகுதியில் ஒரு வீட்டின் அருகே உள்ள விளைநிலத்தில் 30-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தவைக்கப்பட்டிருந்ததை கவனித்தனர்.

அந்த முகவரியில் இருந்த ஒருவரை விசாரித்தபோது, அவர்கள் விளம்பரத்துக்கான ஷுட்டிங் நடத்துவதாகக் கூறியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து, அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு வெளியேறிய ஒருவரை நிறுத்தி விசாரித்தபோது, அவர் திருமணத்தில் கலந்துகொள்ள வந்திருந்ததாக ஒப்புதல் அளித்தார்.

பிறகு, அங்கு சென்று பார்த்தபோது ஏகப்பட்ட மக்கள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்துள்ளனர்.

அப்பகுதியில் Tier 4 Lockdown அமுலில் உள்ள நிலையில், திருமணம் நடத்த அதிகபட்சம் 6 பேரை மட்டுமே அனுமதிக்கக்கூடும்.

இந்நிலையில், ஏராளமானோரை திரட்டி திருமணம் நடத்தியதால், கட்டுப்பாடுகளை மீறியதற்காக அவர்களுக்கு உடனடியாக 10,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், அப்பகுதியில் தடுப்பு அமைத்த பொலிஸார், ஒவ்வொரு காராக வாகன பதிவு எண்ணை குறித்துக்கொண்டு வெளியேற்றினர்.

இச்சம்பவத்தை அடுத்து “நாடுமுழுவதும் கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடித்துவரும் நிலையில், விதிவிலக்காக இது போன்ற வழக்குகள் இருக்கத்தான் செய்கின்றன, மக்கள் தொடர்ந்து விதிகளை மீறினால், கடைசி முயற்சியாக அமலாக்க நடவடிக்கையை எடுப்போம்” என சர்ரே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Comment