இமாச்சல் பிரதேசத்தை உறைய வைத்த கடும் பனிப்பொழிவு…

by Lifestyle Editor
0 comment

சிம்லா : இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அங்குள்ள முக்கிய சாலைகள் உறைபனியால் மூடப்பட்டுள்ளன.

இமாச்சல பிரதேசம் முழுவதும் ஜனவரி 5-ம் தேதி மிகக் கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. மாநிலத்தின் மணாலி உள்ளிட்ட பல பகுதிதிகளில் கடுமையான பனி கொட்டுகிறது. அங்குள்ள பல்வேறு முக்கிய சாலைகள் உறைபனியால் மூடப்பட்டுள்ளன. புதிதாக திறக்கப்பட்ட அடல் சுரங்கப்பாதையின் தெற்கு பகுதி மற்றும் மணாலியில் உள்ள சோலங் நல்லா ஆகிய பகுதிகளுக்கு இடையே சாலைகளை பனிதுகள்கள் மூடியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் கடுமையாக தவித்து வருகின்றனர். அவர்கள் சென்ற வாகனங்கள் நடு வழியில் சிக்கி கொண்டன. அடல் சுரங்கப்பாதை உள்பட பல்வேறு சாலைகளில் மேற்கொண்டு செல்ல முடியாததால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நிற்கின்றன.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று சிக்கி தவித்துள்ள பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். நேற்று சிம்லாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 5.1 டிகிரி செல்ஸியஸ் வெப்ப நிலை உள்ளது. மணாலி, தர்மசாலா, டல்ஹெளசி மற்றும் குஃப்ரி உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் முறையே மைனஸ் 1.4 டிகிரி செல்ஸியஸ், மைனஸ் 3.2 4.1 டிகிரி செல்ஸியஸ், மைனஸ் 2.6 ° C டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையை பதிவு செய்தன.

இமாச்சல பிரதேசம் முழுவதும் ஜனவரி 5-ம் தேதி மிகக் கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment