நடிகை சித்ரா வெளிவந்த திடுக்கிடும் தகவல்..

by Lifestyle Editor
0 comment

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் புகழ் பெற்றவர் நடிகை சித்ரா. இவர் கடந்த 9-ஆம் தேதி 2.30 மணிக்கு சொகுசு ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் அவரது மரணம் கொலை என சித்ராவின் தாய் தெரிவித்திருந்தார். ஆனால் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் சித்ரா தற்கொலைதான் செய்து கொண்டார் என்று உறுதியாக கூறப்பட்டு இருந்தது.

அதனால் இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு மாதமே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையில் சித்ராவுடன் நடித்த நடிகர், நடிகைகள், நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் இவரது இறப்பு குறித்து ஒரு பெண் ஜோதிடர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

பெண் ஜோதிடர் ஜெயஸ்ரீ பாலன் கூறியுள்ளது :

” சித்ரா மே மாதம் 2-ஆம் தேதி 1992-ஆம் ஆண்டு மாலை 5.15 மணிக்கு பிறந்துள்ளார். அவர் இயல்பிலேயே திறமையையும், துணிச்சளையும் கொண்டு இருப்பவர். இவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த வீட்டை ஹேமந்த் அபகரிக்க திட்டமிடுவதாக சித்ராவின் தாய் குற்றம்சாட்டியிருந்தார்.”

” சித்ராவின் மரணம் தற்கொலையும் அல்ல கொலையும் அல்ல. இந்த வீடு தொடர்பாக கணவரை எப்படியாவது பயமுறுத்த வேண்டும் என சித்ரா நினைத்தே தூக்கில் தொங்குவது போல் முடிவு செய்திருக்கிறார். ஆனால் விளையாட்டு விபரீதமாக முடிந்துவிட்டது. ”

” நடிகை சித்ரா விளையாட்டாக, அவரது கணவரை பயமுறுத்த செய்த விஷயம், அவரின் உயிரை பறித்துவிட்டது. அவரது மரணத்திற்கு கணவர் ஹேமந்த் காரணமாக இருக்க முடியாது ” என கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment