பிரித்தானியாவில் இரு வாரங்களில் 2 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் – சுகாதார அமைச்சு

by Lankan Editor
0 comment

பிரித்தானியாவில் எதிர்வரும் இரண்டு வாரகாலப் பகுதியில் சுமார் 2 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், ஒக்ஸ்போர்ட் பல்கலை மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியன இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசிக்கு பிரித்தானிய அரசாங்கம் கடந்த மாதம் 30 ஆம் திகதி அனுமதி வழங்கியிருந்தது.

இதேவேளை ஜனவரி மாத இறுதிக்குள் 2 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை விநியோகிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment