18,177 பேருக்கு கொரோனா உறுதி

by Lifestyle Editor
0 comment

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பிரிட்டனில் பரவி வரும் வீரிமிக்க புதிய வகை கொரோனா வைரஸ், அங்கிருந்து வந்தவர்கள் மூலமாக இந்தியாவிலும் பரவி வருகிறது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர் புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. பழைய கொரோனா வைரஸை விட இது 70% வேகமாக பரவும் என தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,177 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,03,23,965 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒரே நாளில் 217 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,49,435 ஆக அதிகரித்துள்ளதாகவும் கொரோனாவில் இருந்து 99,27,310 பேர் குணமடைந்த நிலையில் 2,47,220 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Related Posts

Leave a Comment