வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலைமை – வடக்கு, கிழக்கில் மழையுடனான வானிலை

by Lankan Editor
0 comment

நாட்டை அண்மித்து வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலைமை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் காலங்களில் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன்படி, வடக்குஇ கிழக்கு, வடமத்தியஇ ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடை இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டவலியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், ஏனைய சில பிரதேசங்களில் பிற்பகல் வேளையில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதுடன், சில இடங்களில் 75 மில்லிமீற்றரிலும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களிலும் காற்று வீசும் சந்தர்ப்பங்களிலும் அனர்த்தங்களை தவிர்க்கும் வகையில் பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Related Posts

Leave a Comment