இன்று குரூப்-1 தேர்வு

by Lifestyle Editor
0 comment

தமிழகம் முழுவதும் காலியாக இருக்கும் 66 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு மாநிலம் முழுவதும் இன்று நடைபெறுகிறது. கடந்த ஏப்.5ல் நடக்கவிருந்த குரூப்-1 முதல்நிலை தேர்வு கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகும், கொரோனா அச்சுறுத்தலால் தேர்வை நடத்த முடியாத சூழல் நிலவிய நிலையில் இன்று தேர்வு நடைபெறுகிறது. கோட்டாட்சியர், வணிகவரி உதவி ஆணையர், தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு இன்று நடக்கவிருக்கும் தேர்வில், மாநிலம் முழுவதும் 2 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

தேர்வர்கள் 9.15 மணிக்கே தேர்வு மையத்திற்குள் வர வேண்டும் என்றும் கருப்பு நிற பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தேர்வறைக்குள் நுழைந்த உடன் தேர்வர்கள் கட்டாயம் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என்றும் டி.என்.பி.எஸ்.சி அறிவுறுத்தியுள்ளது. விடைத்தாளில் தெரியாத கேள்விகளுக்கு ‘E’ என்ற கட்டத்தை ஷேட் செய்ய வேண்டும் என்ற புதிய நடைமுறை இன்று அமல்படுத்தப்படுகிறது. குரூப்-1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுபவர்கள் 3 தாள்கள் உள்ளடக்கிய மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment