நாட்டில் நேற்று மட்டும் 500இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி

by Lankan Editor
0 comment

நாட்டில் நேற்று மட்டும் 502 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44 ஆயிரத்து 371ஆக அதிகரித்துள்ளது.

ஏழாயிரத்து 443 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அதேவேளை, மூவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை பதிவாகியுள்ள நிலையில் மொத்த மரணங்கள் 211ஆக உயர்ந்துள்ளது.

Related Posts

Leave a Comment