கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்ட நான்கில் ஒருவருக்கு தொற்று உறுதி

by Web Team
0 comment

4 அடுக்கு கட்டுப்பாடு அமுலில் இருக்கும் பிரித்தானியா தலைநகர் லண்டனில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்ட நான்கில் ஒருவருக்கு தொற்று உறுதியானதாக சமீபத்திய தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய தரவுகளின்படி, கிறிஸ்துமஸ் வரையிலான வாரத்தில், 149 பகுதிகளில் 61 பகுதியில் (40.9 சதவீதம்) ஜூன் மாதத்திலிருந்து இல்லாத அளவிற்கு அதிகபட்ச கொரோனா உறுதியான விகிதம் பதிவாகியுள்ளது.

இதில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 20 பகுதிகள் லண்டன், கிழக்கு மற்றும் தென்கிழக்கில் உள்ளன.

லண்டன், கிழக்கு மற்றும் தென்கிழக்கில் கொரோனா வைரஸின் புதிய வகை காலடி எடுத்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மோசமான பாதிப்புக்குள்ளான சில இடங்களில் வைரஸ் கட்டுப்பாட்டில் இல்லை என சமீபத்திய தரவு பரிந்துரைக்கிறது.

கடுமையான ஊரடங்கின் கீழ் உள்ள பகுதிகளிலும் கூட வைரஸ் தொடர்ந்து பரவுகிறது மற்றும் கொரோனா உறுதியான எண்ணிக்கை உண்மையான பாதிக்கப்பட்டுள்ளவர்களின் விகிதத்தை குறைத்து மதிப்பிடுகிறது என்ற கவலையை இது தூண்டியுள்ளது.

Related Posts

Leave a Comment