அசத்தல் சலுகை பிஎஸ்என்எல்

by Lifestyle Editor
0 comment

பிஎஸ்என்எல் நிறுவனம் இலவச சிம் கார்டு சலுகையை ஜனவரி 31, 2021 வரை நீட்டித்து இருக்கிறது. இதற்கான அறிவிப்பு பிஎஸ்என்எல் தமிழ் நாடு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

முன்னதாக இந்த சலுகை நவம்பர் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்து நவம்பர 28 ஆம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின் இந்த சலுகை ஜனவரி 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்சமயம் இந்த சலுகை மீண்டும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

சலுகை நீட்டிப்பு மட்டுமின்றி பிஎஸ்என்எல் ரூ. 186 மற்றும் ரூ. 199 சலுகை விலையை மாற்றி இருக்கிறது. பிஎஸ்என்எல் வலைதளத்தில் புதிய சிம் வாங்க விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச சிம் கார்டு வழங்கப்படுகிறது. எனினும், பயனர்கள் முதல் ரீசார்ஜ் ரூ. 100 சலுகையை பெற வேண்டும்.

இதுதவிர பிஎஸ்என்எல் ரூ. 186 சலுகை மற்றும் ரூ. 199 சலுகை விலை மாற்றப்பட்டு இருக்கிறது. அதன்படி ரூ. 186 சலுகை விலை தற்சமயம் ரூ. 199 என மாறி இருக்கிறது. மேலும் இதன் வேலிடிட்டி 30 நாட்களில் இருந்து 28 நாட்களாக மாற்றப்பட்டு இருக்கிறது. இதுதவிர இந்த சலுகையில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

இதேபோன்று பிஎஸ்என்எல் ரூ. 199 சலுகை ரூ. 201 என மாறி இருக்கிறது. இந்த சலுகை பலன்களின் வேலிடிட்டி, அம்சங்கள் மற்றும் பலன்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

Related Posts

Leave a Comment