பிரெக்சிட் விளைவு! இனி இந்த முக்கிய பொருட்களுக்கான வரி ரத்து! பிரித்தானியா முக்கிய அறிவிப்பு

by Lifestyle Editor
0 comment

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதின் விளைவாக சுகாதார பொருட்கள் மீதான விற்பனை வரியை பிரித்தானியா ரத்து செய்துள்ளது.

ஐரோப்பிய உறுப்பு நாடுகள் சுகாதார பொருட்கள் மீதான விற்பனை வரியை ரத்து செய்வதற்கு தடையாக ஐரோப்பிய ஒன்றிய சட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிரித்தானியா விற்பனை வரியை ரத்து செய்துள்ளது.

பெண்களின் சுகாதாரப் பொருட்கள் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை ரத்து செய்துள்ளதாக பிரித்தானியாவின் நிதி அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

சுகாதார பொருட்கள் அத்தியாவசியமானது, எனவே நாங்கள் மதிப்பு கூட்டப்பட்ட வரியை வசூலிக்கவில்லை என்பது சரிதான் என்று கருவூலத்தலைவர் ரிஷி சுனக் கூறினார்.

நாங்கள் ஏற்கனவே பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் இலவச சுகாதார பொருட்களை வழங்கி வருகிறோம்.

தற்போது வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால், சுகாதார பொருட்களை அனைத்து பெண்களுக்கும் கிடைக்கக்கூடிய வகையில் மலிவு விலையில் விற்பதற்கு வழிவகுத்துள்ளது என்று கருவூலத் தலைவர் ரிஷி சுனக் கூறினார்.

மார்ச் மாதத்தில் பட்ஜெட்டை வெளியிடும் போது சுனக் வரியை நீக்குவதாக உறுதியளித்திருந்தார், ஆனால் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டிய நாளுக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.

வரி ரத்து செய்யப்படுவதால் சராசரி பிரித்தானியா பெண்ணின் வாழ்நாளில் சுமார் 40 பவுண்டுகள் மிச்சப்படுத்தும் என்று இங்கிலாந்து கருவூலத்தின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

Related Posts

Leave a Comment