கள்ளக்காதலனை தேடிச் சென்றவருக்கு நேர்ந்த கொடுமை…

by Lifestyle Editor
0 comment

கடலூர்

புவனகிரியில் தனியார் கணினி மையத்தில் புதுச்சேரியை சேர்ந்த திருமணமான பெண் கொலை செய்யப்பட்டு, அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் புவனகிரி பேருந்து நிலையம் அருகேயுள்ள கணினி மையத்தில், அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சிதம்பரம் டி.எஸ்.பி., லாமேக் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து புவனகிரி கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் புகாரின் பேரில் வழக்குப்பதிவு போலீசார் விசாரித்து வந்தனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி பதிவுகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, கொலையான பெண் புதுச்சேரி மாநிலம் பி.எஸ்.பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சத்யா(36) என்பதும், அவருக்கு இரு மகன்கள் இருப்பதும் தெரியவந்தது. ராஜேந்திரன் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், சத்யாவுக்கு சேத்தியாத்தோப்பு அடுத்த தச்சூர் சக்தி விளாகத்தை சேர்ந்த முரசொலிமாறன் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது முரசொலிமாறன் ஆயிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து புவனகிரியில் உள்ள கணினி மையத்தில் கம்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனால் முரசொலிமாறனை சந்திக்க புவனகிரிக்கு வந்தபோது சத்யாவை, அவர் கொலைசெய்தது தெரியவந்தது. இதனை அடுத்து தலைமறைவான இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment