நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

by Lankan Editor
0 comment

நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றினால், எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் வெளியான உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நெதர்லாந்தில் எட்டு இலட்சத்து ஐந்தாயிரத்து 164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் அதிக பாதிப்பினை சந்தித்த 19ஆவது நாடாக நெதர்லாந்து விளங்குகிறது. இதுவரை காலப்பகுதியில் மொத்தமாக 11ஆயிரத்து 529 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், எட்டாயிரத்து 183 பேர் பாதிக்கப்பட்டதோடு, 97 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Posts

Leave a Comment