வேல்ஸில் திங்கட்கிழமை முதல் பாடசாலைகளுக்கு திரும்பும் திட்டம் ஆரம்பம்!

by Web Team
0 comment

இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் உள்ளவர்களை விட வேல்ஸில், ஒரு வாரத்திற்கு முன்னதாக இரண்டாம்நிலை மாணவர்கள் பாடசாலைகளுக்கு திரும்புவார்கள்.

உள்ளூர் சபைகளின் கூற்றுப்படி, பல மேல்நிலைப் பாடசாலைகள் ஜனவரி 11ஆம் திகதி முதல் திரும்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. சில ஜனவரி 6ஆம் திகதி முழுமையாக திறக்கப்படுகின்றன.

நேருக்கு நேர் கற்றல் குறைந்தது ஜனவரி 18ஆம் திகதி வரை தாமதப்படுத்தப்பட வேண்டும் என்று தேசிய கல்வி ஒன்றியம் சிம்ரு அழைப்பு விடுத்துள்ளது. புதிய கொவிட் -19 மாறுபாட்டைப் புரிந்துகொள்ள அதிக நேரம் தேவை என விளக்கம் அளித்துள்ளது.

நேருக்கு நேர் கற்பிப்பதற்காக தங்கள் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர் அனைத்து மாணவர்களும் தொலைதூரக் கற்றலில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேல்ஷ் உள்ளூர் சபைகள், தங்கள் உள்ளூர் நிலைமையை கண்காணித்து வருவதாகக் கூறுகின்றன.

பிரிட்ஜெண்ட், மெர்திர் டைட்ஃபில், ரோண்ட்டா சைனான் டாஃப், பிளேனா க்வென்ட், டொர்பேன் மற்றும் ஸ்வான்சீ உள்ளிட்ட மாவட்டங்கள் தற்போது அனைத்து மாணவர்களும் பாடசாலைகளுக்கு திரும்புவதை ஜனவரி 11ஆம் திகதி திங்கள் முதல் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

மோன்மவுத்ஷையரில் அனைத்து மாணவர்களும் ஜனவரி 6ஆம் திகதி புதன்கிழமை பாடசாலைக்குத் திரும்ப திட்டமிடப்பட்டுள்ளனர். பாடசாலைகள் ஜனவரி 4ஆம் மற்றும் 5ஆம் ஆகிய திகதிகளில் ஒன்லைன் கற்றலை வழங்குகின்றன.

Related Posts

Leave a Comment