பெண்களே ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது எப்படி?

by Lifestyle Editor
0 comment

“இணையத்தில் நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும்- கண்காணிக்கப்படுகிறது. ஒரு சில செயலிகள் மூலம் உங்கள் ஒளிப் படங்கள்கூட மற்றவர்கள் கைகளில் கிடைக்கலாம்”.

பிறந்த தேதியோ, திருமண நாளோ பாஸ் வேர்டுக்கு உகந்தவை அல்ல. குறியீடுகள், எண்கள், பெரிய, சிறிய எழுத்துக்களின் தொடர்பில்லாத கலவையாக பாஸ்வேர்டை தேர்வு செய்து அதை அடிக்கடி மாற்றவும். “நெட் பாங்கிங் மூலம் பரிவர்த்தனை செய்யும் போது இரு வகை பாஸ்வேர்டு கேட்கப்படுகிறது. ஒன்று கணக்கில் நுழைவதற்கானது மற்றொன்று பரிவர்த்தனைக்கானது. எந்த இடத்திலும் பரிவர்த்தனை பாஸ்வேர்டை சேமிக்க வேண்டாம். மாறாக ஒன்&டைம் பாஸ் வேர்ட் பயன்படுத்தவும்”.

நிதி மேலாளருக்கு அனுப்பும் தனிப்பட்ட இமெயில்கள்கூட உலகம் முழுவதும் பல சர்வர்களில் நகலெடுக்கப்படுகின்றன. ஹேக்கர்களும் மெயில் ஐ.டி மற்றும் கணக்கு விவரங்களைக் கொண்டு பணத்தை திருடுகின்றனர். இத்தகைய மோசடிகளில் இருந்து தற்காத்துக்கொள்ள, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு முன்பாகவும், குரல் மூலம் உங்கள் நிதி ஆலோசகர் உங்களை அடையாளம் கண்டு கொள்ளும்படி செய்யுங்கள்.

இமெயில்களை என்கிரிப்ட் செய்யும் பிரெட்டி குட் பிரைவசி (பிஜிபி) மென்பொருளை பயன்படுத்தவும். இதன் முலம், தொடர்பு கொள்ளும் இருவர் மட்டுமே மூல செய்தியை பார்க்க முடியும். மற்ற சர்வர்களில் நகலெடுக்கப்படுவது அர்த்தமில்லாத கிறுக்கல் போல இருக்கும். கிரெடிட் கார்டில் வரம்பு

வங்கி மேலாளர்கள் கடன் வரம்பை உயர்த்திக்கொள்ளும் வாய்ப்பு தேவையான என கேட்டிருக்கலாம். இதை நிதி ஆற்றலாக பலரும் நினைக்கலாம். ஆனால் இதைவிட, குறைந்த வரம்பு கொண்ட பல கார்டுகள் வைத்திருப்பது நல்லது. “நீங்கள் வைத்திருக்கும் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு `2 லட்சம் பயன்பாடு வரம்பு கொண்டிருப்பது நல்லது”.

பெரும்பாலான வங்கிகள் இணையத்தில் பாதுகாப்பாக பயன்படுத்த சிறிய அளவு தொகை கொண்ட ஒரு முறை பயன்பாடு கொண்ட வர்ச்சுவல் கார்டுகளை அளிக்கின்றன. இணைய பரிவர்த்தனைகளின் போது கிரெடிட் கார்டு விவரங்களை தெரிவிக்க வேண்டாம்.

Related Posts

Leave a Comment