லண்டனில் இரவு நேரத்தில் வீட்டுக்குள் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட இளம்பெண் யார்? முதல் புகைப்படம் வெளியானது

by Lifestyle Editor
0 comment

லண்டனில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது.

லண்டனின் Lambethல் தான் இந்த கோர சம்பவம் கடந்த ஞாயிறு அன்று நடந்தது.

அன்றைய தினம் இரவு 9 மணியளவில் Azaria Williams என்ற 26 வயது இளம்பெண் அங்குள்ள ஒரு வீட்டில் கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டார்.

இது குறித்து தகவலறிந்த அவசர உதவி குழுவினர் அங்கு வந்து Azaria Williamsக்கு முதலுதவி சிகிச்சையளித்தனர்.

ஆனாலும் Azaria Williams பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை கொலை செய்ததாக சம்பவ இடத்தில் இருந்த Mark Alexander என்ற 27 வயது இளைஞனை பொலிசார் கைது செய்தனர்.

அவர் மீது கொலை வழக்குப்பதியப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment