தமிழ் சினிமாவின் காதல் திரைப்படங்களை இயக்கி தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் முன்னணி இயக்குனர் கௌதம் மேனன்.
இவர் இயக்கத்தில் தற்போது ஜோஷ்வா இமை போல் காக்க, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்கள் வெளியாக காத்திருக்கிறது.
இயக்குனர் கௌதம் மேனன் அஜித், தனுஷ், சூர்யா, மாதவன் என பலருடனும் பணிபுரிந்துவிட்டார். ஆனால் இதுவரை தளபதி விஜய்யுடன் இணைந்து பணிபுரியவில்லை.
இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ” நடிகர் விஜய்யுடன் இணைந்து கண்டிப்பாக பணிபுரிய வாய்ப்புகள் இருக்கிறது ” என்று அழுத்தமாக கூறியுள்ளார்.
இதனை வைத்துக்கொண்ட ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் இது தளபதி 66 படமாக இருக்கும் என்று பேசிவருகின்றனர்.
ஆனால் இயக்குனர் கௌதம் மேனன் வாய்ப்பு உள்ளது என்று தான் கூறியுள்ளார். அது என்ன படம் என்று அவர் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.