உறவினரால் ஒரு காதல் ஜோடிக்கு ஏற்பட்ட கதி

by Lifestyle Editor
0 comment

பெற்றோருக்கு தெரியாமல் காதல் கல்யாணம் செய்து கொண்ட காதலர்களை அவரின் உறவினர்கள் சுட்டு கொன்ற சம்பவம் நடந்துள்ளது .

ஹரியானாவில் ரோஹ்தக்கில் வசிக்கும் பூஜா என்ற 28 வயதான பெண்ணும் ரோஹித் என்ற 26 வயதான நபரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளார்கள் .இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள், ஆனால் வெவ்வேறு கிராமத்தில் வசித்து வந்தார்கள் .இந்நிலையில் அந்த ரோகித் வசதியில் அந்த பெண்ணை விட குறைந்தவர் என்பதால் அந்த பெண்ணின் மாமா குல்தீப்புக்கும் அந்த பெண்ணின் சகோதரர்களுக்கும் அவர்களின் காதல் பிடிக்கவில்லை .

அதனால் அவர்களின் காதலுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் .அதன் பிறகு அவர்களின் காதலை கை விடுமாறு பலமுறை கூறினார்கள் .ஆனால் அவர்கள் கேட்காமல் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள்.அதன் பிறகு அந்த பெண் அவரின் மாமா குல்தீப் வீட்டில் வசித்து வந்துள்ளார் .

பின்னர் அவர்களின் திருமணத்தால் உறவினர்கள் அனைவரும் கடுமையான கோபத்தில் இருந்தார்கள் அதனால் இருவரையும் கவுரவ கொலை செய்ய திட்டமிட்டார்கள் .அதன் படி கடந்த புதன் கிழமையன்று ரோகித்திடம் அந்த பெண்ணை வந்து மாமியார் வீட்டிற்கு கூட்டி செல்லுமாறு கூறி வீட்டிற்கு வரவைத்தார்கள் .பிறகு இருவரையும் அங்குள்ள ஒரு தனிமையான இடத்திற்கு கூட்டி சென்றார்கள் ,.அங்கு வைத்து அந்த பெண்ணை அவரின் சகோதரன் சுட்டு கொன்றார் .அவரின் கணவர் ரோகித்தை அந்த பென்ணின் மாமா குல்தீப் சுட்டு கொன்றார் ,பிறகு ரோஹித்தின் சகோதரரை சுட்டு காயப்படுத்தினார் ,பிறகு போலீசார் இந்த கொலை பற்றி கேள்விப்பட்டு அவர்களை கொன்ற நால்வரையும் கைது செய்தார்கள் .

Related Posts

Leave a Comment