துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தகவல்

by Lifestyle Editor
0 comment

உரிய நேரத்தில், உரிய நாளில், உரிய இடத்தில் பிரச்சாரத்தை தொடங்குவேன் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார். தேனியில் நடைபெற்ற அரசு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் பிரச்சாரத்தை விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.

உரிய நேரத்தில், உரிய நாளில், உரிய இடத்தில் பிரச்சாரத்தை தொடங்குவேன் என கூறினார். ரஜினி அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவேன் என்றபோது அதற்கு வரவேற்பு அளித்தேன். தற்போது உடல் நலம் கருதி அரசியலுக்கு வரமாட்டேன் என கூறியிருக்கிறார். எனவே அவர் உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் நீடூழி வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டார்

ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பீர்களா என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு பிடிகொடுக்காத அவர், ரஜினிகாந்த முதலில் உடல் நலம் பெற்று வரட்டும் என்றார். அதிமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து பாஜக மேலிட பார்வையாளர் சி.டி.ரவி கூறியது குறித்து கருத்து தெரிவித்த அவர், அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்த முடிவுகளை ஏற்கனவே தெரிவித்து விட்டோம் என்றார்.

இதையடுத்து, தேர்தல் பிரச்சாரத்தை உரிய நேரத்தில், உரிய நாளில், உரிய இடத்தில் தொடங்குவேன் என்றும், உங்கள் ஆசை நிறைவேறும் என்றும் ஓ.பன்னீர்செலவம் கூறினார்.

Related Posts

Leave a Comment