வெளிநாடுகளில் இருந்து மேலும் 355 பேர் நாடு திரும்பினர்

by Lankan Editor
0 comment

கொரோனா வைரஸ் தொற்றினால் வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களில் மற்றுமொரு குழுவினர் இன்று (01) நாடு திரும்பியுள்ளனர்.

வௌிநாடுகளில் இருந்து 355 பேர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக COVID – 19 தொற்று ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

கத்தாரிலிருந்து 30 பேரும் மாலைதீவிலிருந்து 35 பேரும் அவுஸ்திரேலியாவிலிருந்து 290 பேரும் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பியுள்ளவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment