பைசர் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகிக்க WHO அனுமதி

by Lankan Editor
0 comment

பைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்ள உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இந்த முடிவால், பைசர் மற்றும் பயோன்டெக் தடுப்பு மருந்துகள் முதன்முறையாக அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை பெற்றுள்ளன.

இதனால் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளும் உடனடியாக இவற்றுக்கு ஒப்புதல் வழங்கி தடுப்பு மருந்துகளை தேவையான அளவுக்கு இறக்குமதி செய்து கொள்ள முடியும். நாட்டில் தேவையான பகுதிகளுக்கு அவற்றை விநியோகித்து கொள்ளவும் முடியும்.

யுனிசெஃப் மற்றும் பான்-அமெரிக்கன் ஹெல்த் ஆர்கனைசேஷன் போன்ற குழுக்களும் தேவைப்படும் நாடுகளுக்கு விநியோகிப்பதற்கான தடுப்பூசியை வாங்க இது அனுமதிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் உதவி இயக்குநர் ஜெனரல் டாக்டர் மரியாங்கெலா சிமாவோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கொவிட்-19 தடுப்பூசிகளுக்கான உலகளாவிய அணுகலை உறுதி செய்வதற்கான இது மிகவும் சாதகமான நடவடிக்கையாகும்.

ஆனால் எல்லா இடங்களிலும் முன்னுரிமை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான தடுப்பூசி விநியோகத்தை அடைய இன்னும் பெரிய உலகளாவிய முயற்சியின் அவசியத்தை நான் வலியுறுத்த விரும்புகிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment