பாகிஸ்தானில் இந்து சாமியாரின் சமாதி மீது தாக்குதல்!

by SL1234-1
0 comment

பாகிஸ்தான் கைபர்பக்துல்லா பகுதியில் உள்ள இந்து சாமியாரின் சமாதி மீது ஒரு கும்பல் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

கரத் மாவட்டத்தில் டெரி என்ற சிற்றூரில் ஸ்ரீ பரமஹம்ச மஹராஜ் என்கிற இந்து சாமியாரின் பழமையான சமாதியுள்ளது. இந்து தலைவர் ஒருவர் இவ் சமாதியை ஒட்டி வீடு கட்டியமை உள்ளூர் மக்கள் விரும்பவில்லை என்று பொலீசார் கூறியுள்ளனர்.

சமாதிக்கு அருகில் நடந்துகொண்டிருந்தத கட்டிடவேலை சமாதியின் ஒரு பகுதி என உள்ளூர் மக்கள் கருதினார்கள்.

இந்த போராட்டம் குறித்து பொலீசாருக்கு தெரியும் என்றும் அதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்று பொலீஸார் கூறுகின்றனர்.

இந்த போராட்டமானது அமைதியாக நடக்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், ஒரு இஸ்லாமிய மதகுரு மக்களை தூண்டிவிட்டு போராட்டத்தை பெரிதாக்கியுள்ளார் என கூறப்படுகின்றது.

கூட்டம் அதிகளவில் இருந்ததால் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை இருப்பினும் எவருக்கும் எந்தவித சேதமும் இல்லை என பொலீசார் கூறுகின்றனர்

Related Posts

Leave a Comment