சிரியாவில் இராணுவ பேருந்து மீது தாக்குதல், 28 வீரர்கள் பலி!

by SL1234-1
0 comment

சிரியாவில் இராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 28 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சிரியாவில் டிஅல்சோ மாகாணத்தில் சென்ற இராணுவ பேருந்து மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.

ஈராக் எல்லையை அண்டியுள்ள பண்டைய நகரமான தலைநகரம் தல்மைரா அருகில் பெரும்பாலும் சிறிய இராணுவமும் ஈரானிய ஆதரவு போராளிகளும் தங்கியிருக்கும் பகுதியில் பயங்கரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இராணுவ வீரர்கள் மற்றும் அரசாங்க ஆதரவு போராளிகள் தனது தளத்திற்கு திரும்பும் போதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குகைக்குல் பதுங்கியிருக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகள் கடந்த சில மாதங்களாக பதுங்கி இருந்து நடத்தும் தாக்குதல் அதிகரித்துள்ளன என உளவுத்துறை தகவல்கள் தெரிவித்து உள்ளனர்.

Related Posts

Leave a Comment