இலங்கையில் சபாநாயகர் அலுவலகம் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது, காரணம்?

by SL1234-1
0 comment

இலங்கையில் சபாநாயகரின் வாகனத்துக்கும் முன்னால் செல்லும் வாகன சாரதி, உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் சபாநாயகர் அலுவலகத்தை மூட தீர்மானிக்கபட்டுள்ளது.

கொரோனா தொற்றியுள்ள உப பொலிஸ் பரிசோதகர் நாடாளுமன்றத்தில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று முத்திரைகளை கொள்வனவு செய்ததால், அஞ்சல் அலுவலகமும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவ் பொலிஸ் பரிசோதகர் பயணித்த நாடாளுமன்றத்தின் மின்தூக்கியில் எதிர்க்கட்சியை சேர்ந்த அலுவலர்கள் பயணித்தமை பாதுகாப்பு கெமரா மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment