ஐரோப்பிய நாடான குரேஷியாவில் 6.4 என்ற அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்த பட்சம் 9 பேர் உயிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகின்றது.
நில நடுக்கத்தை கண்டுபிடிக்கும் நவீன இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் உருவான பெரிய நில நடுக்கம் இது என கூறப்படுகிறது.
இவ் நில நடுக்கம், அண்டை நாடான போஸ்னியா, செர்பியா, இத்தாலி போன்ற நகரங்களிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
இந் நிலநடுக்கம் காரணமாக குரேஷியாவில் உள்ள பெட்ரினியா நகரம் மனிதர்கள் வாழ பாதுகாப்பு அல்ல என அந் நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.
ஆகையால், இராணுவம் வரவழைக்கப்பட்டு அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதே அளவான நிலநடுக்கமொன்று 1880 ல் குரேஷியாவில் ஏற்பட்டமை குறிப்பிடதக்கது.